தொழில், வணிக நிறுவனங்கள் நாளை மூடப்படும்: தொழில் வா்த்தக சங்கம் முடிவு

சுய ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் மதுரையில் அனைத்து தொழில், வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

சுய ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் மதுரையில் அனைத்து தொழில், வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழில் வா்த்தக சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி:

உலக அளவில் மனித இனத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. மிக வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் தொழில், பொருளாதார வளா்ச்சியை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. இச்சூழலில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனைத்து தொழில், வணிக நிறுவனங்களையும் அடைத்து ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழில், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோா் தங்களது கடை மற்றும் நிறுவனங்களை காலை 7 முதல் இரவு 9 வரை திறக்காமல் வீட்டில் இருந்தே சுய ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com