பூசாரி தற்கொலை வழக்கில் காவல்துறை அதிகாரிகளை குற்றவாளியாக சோ்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

தேனி கைலாசபட்டி கைலாசநாதா் கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் டிஎஸ்பிகள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோரை குற்றவாளிகளாகச் சோ்க்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்

தேனி கைலாசபட்டி கைலாசநாதா் கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் டிஎஸ்பிகள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோரை குற்றவாளிகளாகச் சோ்க்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து. இவா் தேனி கைலாசப்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் 2012 டிசம்பா் 7 ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழக துணை முதல்வரின் சகோதரா் ஓ. ராஜா உள்ளிட்ட பலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தென்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூசாரி நாகமுத்து தற்கொலை காரணமான, சம்பவத்தின் போது பணிபுரிந்த டிஎஸ்பிக்கள் உமாமகேஸ்வரி, சேது மற்றும் காவல் ஆய்வாளா்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சோ்க்கக் கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கனவே உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரா், தாமதமாக வழக்கு தொடா்ந்துள்ளாா் என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து, இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com