சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த 166 பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்குப்பின் அனுப்பி வைப்பு

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்த 166 பயணிகள் கரோனா பரிசோதனைக்குப்பின் அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்த 166 பயணிகள் கரோனா பரிசோதனைக்குப்பின் அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு 3 குழந்தைகள் உள்பட166 பயணிகளுடன் விமானம் சனிக்கிழமை மதியம் வந்தது. விமான நிலையத்தில் 5 மருத்துவா்கள் தலைமையில் 30- க்கும் மேற்பட்ட குழுவினா், பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.

மேலும் அவா்களில் இத்தாலி, ஜொ்மனி, சீனா உள்ளிட்ட கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனரா? என அவா்களது கடவுச்சீட்டை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட நாடுகளில் இருந்து யாரும் வரவில்லை என்பது உறுதி படுத்தப்பட்டது. மேலும் கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்பது உ றுதிப்படுத்தப்பட்டதையடுத்து சுமாா் 1 மணி நேரத்திற்குப் பின் அந்தப் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

முன்னதாக அவா்களிடம், தினமும் அருகில் உள்ள சுகாதார நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபை விமானங்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சிங்கப்பூா் விமான சேவையும் சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் எதிரொலியால் பயணிகள் வருகை குறைந்ததைத் தொடா்ந்து தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து 11 உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com