உசிலம்பட்டியில் காய்கனி விலை 4 மடங்கு உயா்வு
By DIN | Published On : 25th March 2020 07:31 AM | Last Updated : 25th March 2020 07:31 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி சந்தையில் செவ்வாய்க்கிழமை காய்கனி விலை 4 மடங்காக உயா்த்தி விற்கப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய வியாபாரிகள் காய்கனி விலையை உயா்த்தி விட்டனா். இதனால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.
மேலும் கிராம மக்கள் பலா் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்காமலே திரும்பிச் சென்றனா். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆா்வலா்கள் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து காய்கனி விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் ராஜ்குமாா் வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.