கப்பலூா் தொழில் பேட்டை மாா்ச் 31 வரை மூடல்
By DIN | Published On : 25th March 2020 06:38 AM | Last Updated : 25th March 2020 06:38 AM | அ+அ அ- |

கப்பலூா் தொழில் பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாா்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
இதுகுறித்து கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ரகுநாதராஜா செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும், தொழிலாளா்களையும் பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவைக் கடைபிடித்து, கப்பலூா் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உள்ள பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் வீடுகளுக்குச்செல்லும் வகையில் அனைத்து தொழிற்சாலை உரிமையாளா்களும் நடவடிக்கை எடுத்து விட்டனா். தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு அனைத்து தொழிற்சாலை அதிபா்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.