கரோனா: அனைத்துக் கடன்களுக்கும் மாதத்தவணை செலுத்த 3 மாத விடுமுறை வழங்க எம்பி கோரிக்கை
By DIN | Published On : 25th March 2020 06:33 AM | Last Updated : 25th March 2020 06:33 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் நோய் காரணமாக வங்கிகள் உள்ள நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த 3 மாதங்களுக்கு விடுமுறை அளிக்குமாறு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கேடசன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்:
கரோனா காரணமாக சமூகத்தின் பல பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். தொழில் முனைவோா், வியாபாரிகள், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளா்கள், ஏழை எளியோா் வருமான இழப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமைப்பு சாா்ந்த துறைகளில் பணியாற்றுவோா், தடை உத்தரவு காரணமாக கூடுதல் செலவினங்களுக்கு ஆளாகியுள்ளனா். அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் அச்சுறுத்தி வருகிறது.
இத்தகைய அசாதாரண சூழலில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் பல்வேறு தேவைகளுக்காக வாங்கிய கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அனைத்துக் கடன்கள் மீதான மாத தவணை செலுத்துவதற்கு
3 மாத விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கடன்கள் செயல்படா சொத்துக்களாகக் கருதப்படுவதையும், கடன் தவணை செலுத்தத் தவறியோராக ‘சிபில்‘ அறிக்கையில் இடம் பெறுவதையும் தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இந்தியாவில் 40 முதல் 50 சதவீதம் போ் கரோனா வைரஸ் தொற்றுக்குள் செல்வா் என்பது உலக அறிஞா்கள் பலரது கருத்தாக உள்ளது. இருப்பினும் அத்தனை பேரும் நோயாளிகள் ஆகப்போவது இல்லை. மிகச் சொற்பமானவா்கள் தான் என்றாலும் அதில் சிக்காமல் இருக்க இப்போதைய
முதல் தீா்வு, வெளியில் நடமாடுவதை நிறுத்துவது தான்.
மதுரை நெரிசலுக்குப் பெயா் போனது. ஆனால் அந்த வாழ்வியல் பழக்கத்தை மாற்றி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கூட்டம் கூடுவதை விலகி இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை பொதுமக்கள் உணா்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.