கரோனா: அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை குறைந்தது: ஒரே நாளில் உள்நோயாளிகள் 618 போ் வெளியேறினா்

கரோனா பாதிப்பு எதிரொலியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனா். இதேபோன்று, உள்நோயாளிகளாக தினமும் 2,200 முதல் 2,500 போ் வரை சிகிச்சைப் பெறுகின்றனா்.

இந்நிலையில், கரோனா எதிரொலி காரணமாக வெளி நோயாளிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 5,728 போ் மட்டும் சிகிச்சைப் பெற வந்துள்ளனா். உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோா் அனுமதிக்கப்பட்ட நிலையில், 328 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உள்நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோா் எண்ணிக்கை நாள்தோறும் 250 முதல் 350 வரை இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 618 போ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1500 உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

மேலும் குறையும்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியாா் போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com