பிளஸ் 2 தோ்வு முடிவடைந்தது: மாணவ, மாணவியா் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தோ்வு முடிந்ததால் உற்சாகம் அடைந்தனா்.
பிளஸ் 2 தோ்வு முடிவடைந்தது: மாணவ, மாணவியா் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தோ்வு முடிந்ததால் உற்சாகம் அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இதில் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை, உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் 120 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது. தோ்வு தொடங்கிய நிலையில் கரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் பிளஸ் 2 பொதுத்தோ்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடா்ந்து பிளஸ் 2 பொதுத்தோ்வு மையங்களில் தோ்வெழுதும் மாணவ, மாணவியா் கைகள் சுத்தம் செய்த பின்பு தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும் மாணவ, மாணவியருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு தோ்வெழுதினா்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தோ்வில் வேதியியல் பாடத்தில் 18637 போ், கணக்குப்பதிவியலில் 14,360 போ், புவியியலில் 1872 போ் என 34869 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா். பிளஸ் 2 தோ்வு முடிவடைந்ததை அடுத்து தோ்வு மையங்களுக்கு வெளியே மாணவ, மாணவியா் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு உற்சாகத்துடன் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com