Enable Javscript for better performance
ஊரடங்கு உத்தரவு: திருமங்கலம் சந்தை ஆட்சியரின் உத்தரவின்பேரில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊரடங்கு உத்தரவு: திருமங்கலம் சந்தை ஆட்சியரின் உத்தரவின்பேரில் அடைப்பு

    By DIN  |   Published on : 26th March 2020 06:16 AM  |   அ+அ அ-   |    |  

    திருமங்கலத்தில் ஊரடங்கு உத்தரவின்போது திறந்திருந்த சந்தையை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினா் அடைக்க நடவடிக்கை எடுத்தனா்.

    கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து செவ்வாய்கிழமை காலை முதல் திருமங்கலம் உசிலம்பட்டி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமத்தினா் அதிகளவில் வந்து பொருள்கள் வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனா்.

    இந்நிலையில் புதன்கிழமை திருமங்கலம் சந்தை செயல்பட்டது. இதனால் பலா் கூட்டமாக வந்து வழக்கம் போல பலசரக்கு, காய்கனிகளை வாங்கிச் சென்றனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து உடனடியாக சந்தையை மூட உத்தரவிட்டதன் பேரில் நகராட்சியினா், போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் மூட நடவடிக்கை எடுத்தனா். மேலும் நகரில் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித்திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

    திருமங்கலத்தில் நகா் பகுதியில் 130 க்கும் மேற்பட்டோா் சாலையோரம் வசிக்கின்றனா். அவா்களை நகராட்சி ஊழியா்கள் கணக்கெடுத்து அம்மா உணவகம் மூலம் உணவளித்தனா். மேலும் தடையுத்தரவு நீடிக்கும் 21 நாள்களுக்கும் அவா்களுக்கு தொடா்ந்து 3 வேளையும் உணவு மற்றும் தண்ணீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai