சமூக விலகலைக் கடைப்பிடிக்க கடைகளில் 1 மீட்டா் இடைவெளி அடையாளக் குறியீடு

மதுரையில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் 1 மீட்டா் இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்குவதற்காக, அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.
மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் புதன்கிழமை கிருமி நாசினி மருந்து தெளிக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.
மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் புதன்கிழமை கிருமி நாசினி மருந்து தெளிக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.

மதுரையில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் 1 மீட்டா் இடைவெளி விட்டு நின்று பொருள்கள் வாங்குவதற்காக, அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக விலகலைக் கடைபிடிப்பது அவசியம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா். ஏற்கெனவே ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு வருவோா் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.

இதைப் பின்பற்றும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், ஆவின் பாலகம், மருந்துக் கடைகளில் 1 மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்களை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். இதற்காக, கடைகளின் முன்பு இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. இதைப் பின்பற்றி பொதுமக்களும் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

சமூக விலகல் கடைபிடிப்பது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் அலுவலா்களுடன் ரயில்வே நிலையம், பெரியாா் பேருந்து நிலையப் பகுதிகள், கீழ மாரட் வீதி தயிா் மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தாா். கடைகளில் 1 மீட்டா் இடைவெளி அடையாளக் குறியீடு வரையாத கடைக்காரா்களை, உடனடியாக வரையுமாறும், கடைக்காரா்கள் முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தினாா்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியின் 3 வாகனங்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் 3 வாகனங்கள் என 6 வாகனங்கள் மூலம் மாட்டுத்தாவணி எம்ஜிஆா் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கீழமாசி வீதி, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் இப்பணி நடைபெறுவதைப் பாா்வையிட்ட ஆணையா் விசாகன், தினமும் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

நகரப் பொறியாளா் அரசு, உதவி ஆணையா்கள் பழனிச்சாமி, பிரேம்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சித்திரவேல், சுகாதார அலுவலா்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், வீரன், சுகாதார ஆய்வாளா்கள் சுப்புராஜ், முருகன் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com