கரோனா: எம்.பி. தொகுதி நிதியில் ரூ.56 லட்சம்; அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.56.17 லட்சத்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, மதுரை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.56.17 லட்சத்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஒதுக்கீடு செய்துள்ளாா். இதற்கான ஒப்புதல் கடிதத்தை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை வழங்கியுள்ளாா்.

இதன்படி, செயற்கை சுவாசக் கருவி 2, தொ்மல் ஸ்கேனா் 5, முகக் கவசம் (என்95) 1,000, மூன்றடுக்கு

முகசுவாசம் 10 ஆயிரம், பாதுகாப்பு கவச உறைகள் 10,000, ஆக்ஸிஜன் சிலிண்டா் 25, நெப்லைசா் 50, குளுக்கோ மீட்டா் 100, தொற்று அகற்றும் மருந்து அடிக்கும் ஸ்பிரே 5 என்பன உள்ளிட்ட 17 வகையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.56 லட்சத்து 17 ஆயிரத்தை தொகுதி நிதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com