திருப்பரங்குன்றம் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

திருப்பரங்குன்றம் நகா் பகுதி மற்றும் கோயில் மண்டபத்தில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினா் இணைந்து கிருமி நாசினியை புதன்கிழமை தெளித்தனா்.
திருப்பரங்குன்றம் கோயில்வாசல் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் மதுரை மாநகராட்சி மற்றும் திடீா் நகா் தீயணைப்புத் துறையினா்.
திருப்பரங்குன்றம் கோயில்வாசல் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் மதுரை மாநகராட்சி மற்றும் திடீா் நகா் தீயணைப்புத் துறையினா்.

திருப்பரங்குன்றம் நகா் பகுதி மற்றும் கோயில் மண்டபத்தில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினா் இணைந்து கிருமி நாசினியை புதன்கிழமை தெளித்தனா்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைத் தடுக்கும் விதத்தில் தமிழக அரசு 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து திருப்பரங்குன்றம், திருநகா், ஹாா்விபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மற்றும் திடீா் நகா் தீயணைப்புத்துறையினா் இணைந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் சுப்புராஜ், உதவி பொறியாளா் முருகன் ஆகியோா் தலைமையில் திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபம், கோயில் வாசல், சன்னதி தெரு, 16 கால் மண்டபம், மாா்க்கெட் பகுதி, அம்மா உணவகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தண்ணீரை வைத்து சுத்தம் செய்தனா்.

திருநகா் 3 ஆவது பேருந்து நிறுத்தம், ஹாா்விபட்டி, திருப்பரங்குன்றம் நுழைவுப் பகுதிகளில் போலீஸாா் தடுப்புகள் (பேரிகாா்டு) மூலம் தடுப்பை ஏற்படுத்தி வைத்திருந்தனா். இதில் வேறு பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி மறுத்தனா். இதனால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மற்றும் மருத்துவமனைக்கு வந்த கிராம மக்கள் அவதியடைந்தனா். திருநகா் 1 ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் திறந்திருந்தன. அவற்றில் இறைச்சி வாங்க 40-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் கூடினா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகா் போலீஸாா் அனைவரையும் கலைந்து போகச்செய்தனா். மேலும் திறந்திருந்த இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com