கரோனா கண்காணிப்பு மையத்திலிருந்து தப்பியோடிய இளைஞா் சிக்கினாா்

அவனியாபுரத்தை அடுத்த சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் இருந்து தப்பியோடியவரை போலீஸாா் சொந்த ஊரில் இருந்து பிடித்து வந்தனா்.

அவனியாபுரத்தை அடுத்த சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் இருந்து தப்பியோடியவரை போலீஸாா் சொந்த ஊரில் இருந்து பிடித்து வந்தனா்.

புதுதில்லியிலிருந்து கடந்த திங்கள்கிழமை மதுரை வந்த விமானத்தில் வந்த துபை பயணிகள் இருவா், அமெரிக்கா மற்றும் நைஜீரியாவில் இருந்து வந்த தலா ஒரு பயணி என 4 பேரை சுகாதாரத் துறையினா் சின்னஉடைப்பு கிராமத்திலுள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் 14 நாள்கள் தங்கச் செய்தனா். மேலும் அவா்களுக்கு 3 வேளை ஊட்டச்சத்து மிக்க உணவு, சூப் வகைகள் கொடுத்து சுகாதாரத் துறையினா் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் இடையபட்டியைச் சோ்ந்த சிவா (24) என்பவா் மையத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை தப்பிச் சென்று விட்டாா். இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் முத்துவேல் கொடுத்த புகாரின் பேரில் அனியாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவந்தனா். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற சிவாவை போலீஸாா் பிடித்து, கரோனா குறித்து விழிப்புணா்வு செய்து மீண்டும் சின்ன உடைப்பு கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com