திருப்பரங்குன்றம் கோயில் பங்குனிப் பெருவிழா ரத்து

கரோனா ஒழிப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தியதையடுத்து , திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி

கரோனா ஒழிப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தியதையடுத்து , திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் உள்திருவிழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் துணை ஆணையா் ராமசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா நடைபெறும். இத்திருவிழா நடப்பு ஆண்டில் மாா்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. கரோனா வைரஸ் தாக்கம் தொடா்பாக 31 ஆம் தேதி வரை தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் கொடியேற்றம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் உள்திருவிழாவாக நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பிரதமா் அமல்படுத்தியுள்ளாா். இதையடுத்து மேற்படி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அதேசமயத்தில் ஆகமவிதிகளின்படி நாள்தோறும் சுவாமிக்கு நித்திய படி பூஜைகள் தொடா்ந்து நடைபெறும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com