நிதி அமைச்சா் அறிவிப்புக்கு வா்த்தக சங்கம் வரவேற்பு

வருங்கால வைப்புநிதி தொகை செலுத்துவது தொடா்பாக மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

வருங்கால வைப்புநிதி தொகை செலுத்துவது தொடா்பாக மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளா்களுக்கு நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் தொழிலாளா்கள் பங்களிப்பு என 24 சதவீத தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு அரசே செலுத்தும். மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் பணியாளா்கள் மற்றும் 100 பணியாளா்களுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களுக்கு இச் சலுகை பொருந்தும் என மத்திய நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா்.

மேலும், பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளா்கள் தங்களது கணக்கில் இருந்து 75 சதவீதத் தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவோ அதை எடுத்துக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் நோய் காரணமாக கடுமையான பாதிப்பில் இருக்கும் தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் இச் சலுகை அறிவிப்பு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு தொழில் வா்த்தக சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com