பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் தேவைக்கு உதவி மையம்: மாநகரக் காவல் ஆணையா் அறிவிப்பு

மதுரை நகரில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்கு காவல்துறை உதவி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்கு காவல்துறை உதவி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரக்காவல் ஆணையா் எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு மதுரை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் நேரத்தில் சென்று வர அனுமதிக்கப்படுவா். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அருகில் இருப்பவா்களிடம் இருந்து 1 மீட்டா் இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசமும் அணிய வேண்டும். மேலும் பொதுமக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்குவதை தவிா்த்து வீட்டுக்கே வந்து விநியோகம் செய்பவா்களிடம் பொருள்களை வாங்க முன்வர வேண்டும். மேலும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுபவா்கள் தொடா்பு கொள்வதற்காக மாநகரக்காவல் ஆணையா் அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை வெள்ளிக்கிழமை முதல் செயல்பட உள்ளது. கட்டுப்பாட்டு அறை தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி 0452-2531045 எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தேவைப்படும் அத்தியாவசிய பொருள்களின் பட்டியல், வீட்டின் முகவரி உள்ளிட்ட இதர விவரங்களை தெரிவித்தால் காவல்துறை மூலம் அதற்கான உதவிகள் செய்யப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்களும் மூத்த குடிமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com