மொத்த விற்பனைக் கடைகளை அனுமதிக்க முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

உணவுப் பொருள் மொத்த விற்பனைக் கடைகளை குறைந்த தொழிலாளா்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உணவுப் பொருள் மொத்த விற்பனைக் கடைகளை குறைந்த தொழிலாளா்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: மதுரை மற்றும் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு வணிகா்களுக்கு மதுரையில் உள்ள மொத்த வணிகா்களிடம் இருந்து தான் அத்தியாவசியப் உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, பருப்பு, மாவு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், மஞ்சள், மிளகு, எண்ணெய் போன்ற பொருள்கள் சென்று கொண்டிருக்கின்றன. இங்கிருந்து பொருள்கள் செல்லவில்லையெனில் மாவட்டங்களில் பற்றாக்குறை ஏற்படும்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோரது கவனத்துக்கு எடுத்துச் சென்றும், மதுரையில் கரோனா பாதிப்பில் ஒருவா் உயிரிழந்த காரணத்தால், மொத்த வணிகத்துக்கு அனுமதி அளிக்க மறுக்கின்றனா். ஆகவே, குறைந்த தொழிலாளா்களுடன் மொத்த விற்பனைக் கடைகளை அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்படும் இக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com