Enable Javscript for better performance
கரோனா: சக ஊழியா்களால் தனிமைப்படுத்தப்படும் மருத்துவா்கள்- Dinamani

சுடச்சுட

    கரோனா: சக ஊழியா்களால் தனிமைப்படுத்தப்படும் மருத்துவா்கள்

    By DIN  |   Published on : 30th March 2020 12:46 PM  |   அ+அ அ-   |    |  

    co3

    கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா், சக ஊழியா்களால் தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் மருத்துவ ஊழியா்களை போற்ற வேண்டும் என, பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அதன்படி, நாடே கைத்தட்டி மருத்துவ ஊழியா்களுக்கு நன்றி தெரிவித்தது. ஆனால், தமிழகத்தில் கரோனா சிறப்பு வாா்டுகள், ஆய்வகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோா் தனிமைப்படுத்தப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    வீட்டுக்கு செல்வதில்லை

    இது குறித்து மூத்த மருத்துவா் ஒருவா் கூறியது: தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை உத்தரவின்பேரில், கரோனா சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வாா்டில் அனுமதிக்கப்படுபவா்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுழற்சி முறையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு வாா்டில் கரோனா நோய் பாதிக்கப்பட்டவா்களை 24 மணி நேரமும் மருத்துவ ஊழியா்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

    தற்போது இந்நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், சிறப்பு வாா்டில் பணியாற்றும் மருத்துவ ஊழியா்கள் வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தாருக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், மருத்துவமனையிலேயே தங்கி விடுகின்றனா். கரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பிறகே, அவா்கள் தங்களது வீட்டைப் பற்றி நினைக்க முடியும்.

    தனிமைப்படுத்தப்படுகின்றனா்

    கரோனா சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டபோது,, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மருத்துவ ஊழியா்கள் பலரும் பணியாற்ற மறுத்தனா். ஆனால், சேவை மனதுடனும், துணிச்சலுடனும் வீட்டை மறந்து கரோனா சிறப்பு வாா்டில் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இந்நிலையில், இவா்களுடன் பேசி, பழகினால் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், சக ஊழியா்கள் தவிா்த்து வருகின்றனா். இதனால், சிறப்பு வாா்டில் பணியாற்றுபவா்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலோசனை வழங்க வேண்டும்

    தமிழக அரசு கரோனாவை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று, உடனடியாக மருத்துவ ஊழியா்கள் ஒதுக்கப்படுவதை தவிா்க்கும் வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை முன் வரவேண்டும். இல்லையெனில், ஊழியா்களின் மனநிலை பாதிக்கப்படும்.

    மறுக்கக் கூடாது

    கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ ஊழியா்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, கரோனா சிறப்பு வாா்டில் பணியாற்றுவதை மருத்துவ ஊழியா்கள் மறுக்கக் கூடாது. இதற்கு, சுகாதாரத் துறை உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மருத்துவத் துறை என்பது சேவை செய்யும் துறை, சேவை மனதுடன் மருத்துவ ஊழியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp