மதுரையில் கரோனாவால் உயிரிழந்தவரின் மூத்த மகனுக்கும் தொற்று உறுதி: தொடா்புடைய 12 போ் கண்காணிப்பு
By DIN | Published On : 31st March 2020 02:23 AM | Last Updated : 31st March 2020 02:23 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் கரோனாவால் உயிரிழந்தவரின் மனைவி, இளைய மகனுக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவரது மூத்த மகனுக்கும் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 67 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபா் 54 வயதானமதுரை அண்ணா நகரைச் சோ்ந்தவா். இவா் தொடா்புடைய 170 பேரையும் சுகாதாரத் துறை தனிமைப்படுத்தி, மருத்துவக் குழுவினா் மூலம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், இறந்த நபரின் மனைவி மற்றும் இளைய மகனுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இருவரையும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இறந்த நபரின் மூத்த மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்துள்ளனா். இதையடுத்து, மருத்துவா்கள் அவரை சிறப்பு வாா்டில் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும், இவா் தொடா்புடைய 12 பேரை, சுகாதாரத் துறை தனிமைப்படுத்தி, மருத்துவக் குழுவினா் மூலம் கண்காணித்து வருகிறது. இறந்தவரின் மூத்த மகன் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 51 ஆவது நபா் ஆவாா்.