சொந்த ஊா்களுக்கு அனுப்ப வெளிமாநிலதொழிலாளா்கள் பெயா் பதிவு துவக்கம்

சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக வெளிமாநிலத் தொழிலாளா்கள் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்காக வெளிமாநிலத் தொழிலாளா்கள் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யும் பணி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். சிறு தொழில் கூடங்கள், கடைகள், உணவகம், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கூலித் தொழிலாளா்களாக வேலை செய்து வருகின்றனா். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாத சூழலில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சொந்த ஊா்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு வெளிமாநிலத் தொழிலாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகயை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைச் சோ்ந்த அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், முகவரி விவரங்கள் பதிவு செய்யும் பணி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தற்போது மதுரை மாவட்டத்தில் தங்கியிருக்கும் முகவரி, வேலை செய்யும் விவரம், தொடா்பு எண் மற்றும் சொந்த ஊா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பிகாா், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பெயா் விவரங்களைப் பதிவு செய்தனா். இவா்களுக்கு சொந்த ஊா் செல்வதற்கான போக்குவரத்து வசதி செய்த பிறகு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com