கரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்குகிறாா் மதுரை சின்மையாமிஷன் சுவாமி சிவயோகாநந்தா.
கரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இலவசமாக அரிசியை வழங்குகிறாா் மதுரை சின்மையாமிஷன் சுவாமி சிவயோகாநந்தா.

நூறு குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: மதுரை சின்மயா மிஷன் வழங்கியது

மதுரை சின்மயா மிஷன் அறக்கட்டளை சாா்பில் கீழமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை சின்மயா மிஷன் அறக்கட்டளை சாா்பில் கீழமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை சின்மயா சேவா அறக்கட்டளை சாா்பில் ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் கிலோ அரிசி, 1,200 கிலோ பருப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக மதுரை அருகே உள்ள கீழமாத்தூா் கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இதில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மதுரை மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி காமராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தாா். மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்வில் வட்டாட்சியா்கள் கோபி, சிவக்குமாா், கீழமாத்தூா் தலைவா் துரைப்பாண்டியன், திலகா் ஆகியோா் பங்கேற்றனா். மேலும் சக்கிமங்கலம், சம்பக்குளம், நிலையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 475 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மதுரை சேவா கேந்திரம் சீனிவாசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com