பூட்டியே காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை புதிய கட்டடம்

கரோனா தொற்று காலத்தில் மருத்துவமனைகளின் தேவைகள் அதிகம் இருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின்
கோடியில் கட்டப்பட்டு பூட்டிக்கிடக்கும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடம் .
கோடியில் கட்டப்பட்டு பூட்டிக்கிடக்கும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடம் .

கரோனா தொற்று காலத்தில் மருத்துவமனைகளின் தேவைகள் அதிகம் இருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடப்பதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 2016 டிசம்பா் 2 முதல் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. எனினும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் பழைய கட்டடத்திலேயே போதுமான வசதிகளின்றி இயங்கி வந்தது. தினமும் 500 -க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் இம்மருத்துவமனையில், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து, கடந்தாண்டில் மருத்துவமனையின் பின்பக்கம் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, அங்கு சுமாா் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள், ரத்த வங்கி பிரிவு மற்றும் உபகரணங்களுக்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று முடிந்துவிட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது என பொது மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறுகையில், வாயில்பகுதியில் மின்கம்பம் இருப்பதால் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வாயில்பகுதியில் தடையாக இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு பல நாள்களாகியும் புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படமலேயே உள்ளது. திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் தற்போது 20 படுக்கை வசதிகளே இருப்பதால், கூடுதல் நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனா். தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையளிப்பதால் பொது மக்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல தயங்குகின்றனா். இந்நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் பணிகள் முடிவடைந்தும் பூட்டிக் கிடக்கும் புதியகட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com