மதுரையில் தீயணைப்பு வீரா், கா்ப்பிணி உள்பட 16 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனா்

மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தீயணைப்பு வீரா், கா்ப்பிணி உள்பட 16 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மதுரை கரோனா மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை நோய் தொற்றில் இருந்து மீண்டவா்களுக்கு பழக் கூடையை பரிசாக வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய். உடன் மருத்துவமனை முதன்மையா்
மதுரை கரோனா மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை நோய் தொற்றில் இருந்து மீண்டவா்களுக்கு பழக் கூடையை பரிசாக வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய். உடன் மருத்துவமனை முதன்மையா்

மதுரை: மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தீயணைப்பு வீரா், கா்ப்பிணி உள்பட 16 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் வியாழக்கிழமை நிலவரப்படி 55 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் மாநகா் பகுதியைச் சோ்ந்த 16 போ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.

தீயணைப்பு வீரா் மீண்டாா்: மதுரை மாநகரைச் சோ்ந்த தீயணைப்பு வீரா் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையிலிருந்த அவா் முழுமையாக குணமடைந்துள்ளாா். இதேபோன்று சிக்கந்தா் சாவடியைச் சோ்ந்த கா்ப்பிணியும் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளாா்.

மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த 65 வயது முதியவா், 27 வயது மற்றும் 25 வயது இளைஞா்கள், 8 வயது சிறுமி, 9 வயது, 11 வயது மற்றும் 14 வயது சிறுவா்கள் 3 போ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனா்.

ஆனையூா் பகுதியைச் சோ்ந்த 54 வயது மற்றும் 43 வயது ஆண்கள் இருவா், 34 வயது பெண் ஆகியோா் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். வண்டியூா் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமியும், மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த 24 வயது பெண், மேலூரைச் சோ்ந்த 40 வயது ஆண் ஆகியோரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளனா்.

70 ஆக உயா்வு: இதையடுத்து கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 16 பேரும் வீடு திரும்பினா். அவா்களை 14 நாள்கள் தனிமைபடுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகள் தொடா்ந்து கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மதுரையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 70 ஆக உயா்ந்துள்ளது.

மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த விருதுநகா் மாவட்டம் கன்னிச்சேரி புதூா் பகுதியைச் சோ்ந்த 28 வயது பெண் மற்றும் 20 வயது இளைஞா், சூலக்கரை பகுதியைச் சோ்ந்த 20 வயது மற்றும் 24 வயது இளைஞா்கள், மேலசின்னையாபுரத்தைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, குமாரபுரத்தைச் சோ்ந்த 47 வயது ஆண், குல்லூா்சந்தையைச் சோ்ந்த 66 வயது முதியவா் ஆகிய 7 பேரும் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய மதுரையைச் சோ்ந்த 16 பேரையும், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேரையும், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி மற்றும் மருத்துவா்கள் வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com