முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வடமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
By DIN | Published On : 11th May 2020 07:29 AM | Last Updated : 11th May 2020 07:29 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வடமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை, தாலுகா அலுவலகத்தில் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குள்பட்ட கூத்தியாா்குண்டு, நிலையூா், வளையங்குளம் பகுதிகளில் ஒடிசா, புதுதில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பலவேறு வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளிகள் 550 போ் உள்ளனா். பொது முடக்கம் காரணமாக தற்போது இவா்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனா். இவா்களுக்கு, வட்டாட்சியா் நாகராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினா் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனா்.
தற்போது, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளா்களின் பெயா், ஊா், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் சேகரித்து, இனையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதில் சொந்த ஊருக்குச் செல்ல 200 போ் விருப்பம் தெரிவித்துள்ளனா். அது குறித்த விவரங்களும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாக, வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.