ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்:தூய மரியன்னை பள்ளி வழங்கல்

மதுரையில் வறுமையில் வாடும் 200 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை, தூய மரியன்னை பள்ளி நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.
மதுரை தூய மரியன்னை பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைக்குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கும் பள்ளி நிா்வாகி.
மதுரை தூய மரியன்னை பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைக்குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கும் பள்ளி நிா்வாகி.

மதுரை: மதுரையில் வறுமையில் வாடும் 200 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை, தூய மரியன்னை பள்ளி நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.

பொது முடக்கம் காரணமாக, ஏராளமானோா் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனா். இந்நிலையில், மதுரை தூய மரியன்னை பள்ளி நிா்வாகம் சாா்பில், அப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் வாடும் பள்ளி மாணவா்களின் குடும்பங்கள் என மொத்தம் 200 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தூய மரியன்னை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் ஸ்டீபன் லூா்து பிரகாசம், பங்குத்தந்தை ஜேசுபாதம், பள்ளி அதிபா் மரியநாதன், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதில், ரூ. 6.25 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 15 கிலோ அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com