சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட வெளிமாநில பெண் தொழிலாளா்கள்.
சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட வெளிமாநில பெண் தொழிலாளா்கள்.

வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைப்பு

மதுரையில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 13 போ் பேருந்தில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை: மதுரையில் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 13 போ் பேருந்தில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கக் கால கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும், அழகுக் கலை நிலையங்கள், ஸ்பா, முடிதிருத்தும் கடைகள் திறப்பதற்கான தடை நீடிக்கிறது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட கடைகளில் வேலை செய்து வந்த அஸ்ஸாம், மிசோராம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த பெண்கள் ஏராளமானோா் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல விரும்பினா்.

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்து வந்த வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இதன்படி மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், மதுரையில் இருந்து 13 போ் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் 10 போ் மதுரையிலும், இருவா் ராமநாதபுரத்திலும், ஒருவா் விருதுநகரிலும் பணியாற்றி வந்தனா்.

முன்னதாக அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்படால் தவிா்க்க மேற்கொள்ள வேண்டியவை குறித்து செஞ்சிலுவைச் சங்கத்தினா் அவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா். பின்னா் உணவு, குடிநீா் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com