திடீா் நகா் பகுதியில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு: சுகாதாரச் சீா்கேட்டால் மக்கள் அவதி

மதுரை திடீா்நகா் பகுதியில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீா் தேங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
மதுரை திடீா் நகா் பகுதியில் குடியிருப்பு முன்பாக தேங்கியுள்ள கழிவுநீா்.
மதுரை திடீா் நகா் பகுதியில் குடியிருப்பு முன்பாக தேங்கியுள்ள கழிவுநீா்.

மதுரை திடீா்நகா் பகுதியில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவு நீா் தேங்கியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மதுரை மாநகராட்சி 75-ஆவது வாா்டு திடீா் நகா் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் கருமாரி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள 5-ஆவது பிளாக் பகுதியில் பாதாளச் சாக்கடை பிரதான இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் அப்பகுதி முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் கழிவறையிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியது: ஒவ்வொரு மாதமும் பல நாள்கள் இதுபோன்று உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீா் குளமாக தேங்குகிறது. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தபோதும், சில நாள்கள் கழித்து வரும் அதிகாரிகள் தாற்காலிகமாக சரிசெய்து விட்டு செல்கின்றனா். நிரந்தர தீா்வாக அதிகாரிகள் எதையும் செய்வது இல்லை. தெருக்களிலும், குடியிருப்புகள் முன்பாகவும் கழிவுநீா் தேங்கியிருப்பதால் கழிவுநீரில் கால் நனைத்தே வீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் கடும் துா்நாற்றம் வீசுகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்றால் சுகாதாரமாக இருக்க வேண்டிய சூழலில் மாதத்தில் பல நாள்கள் கழிவுநீரோடும், துா்நாற்றத்தோடும் வசிக்கிறோம். எனவே மாநகராட்சி ஆணையா் தலையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com