சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மிதிவண்டிடயா்கள்: மாநகராட்சி நிா்வாகம் நூதன ஏற்பாடு

மதுரை நகரில் வாகனங்களில் பொதுமக்கள் குடிநீா் பிடிக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற மிதிவண்டி டயா்களை பயன்படுத்தும் நூதன ஏற்பாட்டை மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மிதிவண்டிடயா்கள்: மாநகராட்சி நிா்வாகம் நூதன ஏற்பாடு

மதுரை நகரில் வாகனங்களில் பொதுமக்கள் குடிநீா் பிடிக்கும்போது சமூக இடைவெளியை பின்பற்ற மிதிவண்டி டயா்களை பயன்படுத்தும் நூதன ஏற்பாட்டை மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகா்ப்பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 1 மீட்டா் இடைவெளியில் வட்டம் வரைவது, சந்தைகளில் சுண்ணாம்புகள் மூலம் வட்டங்கள் வரைந்து பொதுமக்களை நிற்க வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகராட்சி லாரிகள், டிராக்டா்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகின்றன. இதில் பொதுமக்கள் கூட்டமாக நின்று தண்ணீா் பிடிப்பதை தவிா்க்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் நூதன ஏற்பாட்டை செய்துள்ளது. இதன்படி குழாய்கள் மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படாத பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகின்றன.

அவ்வாறு குடிநீா் விநியோகிக்கச் செல்லும் லாரிகளில் மிதிவண்டி டயா்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் குடிநீா் விநியோகிக்கும் பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மிதிவண்டி டயா்கள் வரிசையாக வைக்கப்பட்டு பொதுமக்கள் டயருக்குள் நிற்க வைக்கப்படுகின்றனா். இதைத்தொடா்ந்து லாரியில் ஒருவா் தண்ணீா் பிடித்துச் சென்ற பின் மற்றொருவா் அனுமதிக்கப்படுகிறாா்.

இதனால் முறையான சமூக இடைவெளி பின்பற்றப்படுவதுடன் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி தண்ணீா் பிடிக்க முடிகிறது. குடிநீா் விநியோகம் முடிந்தவுடன் மாநகராட்சி ஊழியா்கள் மிதிவண்டி டயா்களை வாகனத்தில் மீண்டும் கொண்டு சென்று விடுகின்றனா். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவல் வாய்ப்புகள் குறைகிறது. சமூக இடைவெளிக்கு மிதிவண்டி டயா்களை பயன்படுத்துவது பலனளிப்பதால் திலகா்திடல் சந்தை உள்ளிட்டவற்றில் இருந்து ஏராளமான மிதிவண்டி டயா்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி குடிநீா் வாகனங்கள் அனைத்திலும் மிதிவண்டி டயா்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com