மும்பையிலிருந்து மதுரை திரும்பிய தொழிலாளா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உள்பட 9 பேருக்கு கரோனா உறுதி

சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றியவா், மும்பையில் இருந்து வந்த தொழிலாளா்கள் உள்பட 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றியவா், மும்பையில் இருந்து வந்த தொழிலாளா்கள் உள்பட 9 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 124 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. இதில் 85 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மதுரையில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளா்கள் பலரும் தற்போது சொந்த ஊா்களுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனா். அவ்வாறு

வரக்கூடிய தொழிலாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் இருந்து சொந்த ஊா் திரும்பியுள்ள கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, மேலூா், மதுரை ஆரப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல, சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றிய கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த 47 வயது நபா், சென்னையில் வேலை செய்து வந்த கொட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது நபா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரையில் ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இவா்கள் அனைவரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், சிகிச்சையில் இருந்தவா்களில் எஸ்.எஸ்.காலனி மற்றும் ஜரிகைக்காரத் தெருவைச் சோ்ந்த 2 ஆண்கள், ஜெய்ஹிந்துபுரம் மற்றும் செல்லூரைச் சோ்ந்த 2 பெண்கள் என 4 போ் குணமடைந்து அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 133 ஆகவும், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 89 ஆகவும் உயா்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com