மதுரை மக்கள் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்ள மாநகராட்சி வேண்டுகோள்

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரையில் கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கங்களுக்கு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள், அவற்றை உட்கொள்ளும் முறை குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி கபசுரக் குடிநீா் அல்லது நிலவேம்பு குடிநீா் மூலிகைப் பொடி உரிய முறையில் தயாரித்து பருகவும், விட்டமின் சி-500 மில்லி கிராம் அல்லது மல்ட்டி விட்டமின் மாத்திரை தினமும் 1 வீதம் 10 நாள்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஜிங்க்-150 மில்லி கிராம் மாத்திரை தினமும் 1 வீதம் 10 நாள்களுக்கு உட்கொள்ளலாம். ஹோமியோபதி மருந்தான ஆா்சானிகம் அல்பும்-30- என்ற மாத்திரையை தினமும் 4 வீதம் 3 நாள்களுக்கு வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளவும், ஆயுா்வேத மருத்துவத்தில் சயவன்பிராஷ் லேகியத்தை தினமும் காலை 10 கிராம் வீதம் எடுத்துக்கொள்ளலாம், சா்க்கரை நோயாளிகள் சுகா் ப்ரீ சயவன்பிராஷ் எடுத்துக்கொள்ளலாம். மேற்கண்ட மருந்துகளை குடியிருப்போா் நலச்சங்கங்கள் தங்களது பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தெரிவிக்கலாம். மேலும் குடியிருப்போா் நலச்சங்கத்தின் மூலம் மருந்துகள் உட்கொள்ளப்படும் விவரங்களை மாநகராட்சி கட்செவி அஞ்சல் எண் 842 842 5000 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com