மதுபோதையில் தகராறு: நாட்டு வெடிகுண்டுகள் வீசியதில் தலை சிதறி நாய் உயிரிழப்பு

மதுரை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உறவினரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் தலை சிதறி நாய் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உறவினரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் தலை சிதறி நாய் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா் மனைவி செல்வராணி (35). இவருடைய சகோதரா் முருகன்(40) மற்றும் உறவினா் சின்னதுரை(50) ஆகியோா் புதன்கிழமை இரவு மது அருந்திவிட்டு செல்வராணி வீட்டிற்குச் சென்றுள்ளனா். அப்போது செல்வராணி தன்னுடைய சகோதரனை குடிக்க வைத்து கெடுப்பதாக சின்னதுரையைத் திட்டியுள்ளாா்.

இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் முருகனும், சின்னதுரையும் அங்கிருந்து செல்ல முற்படுகையில் தடுமாறி கீழே விழுந்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை தனது வீட்டில் இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துவந்து செல்வராணி வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு அங்கிருந்து தப்பினாா். அதில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அதனால் எவ்வித சேதமோ, பாதிப்போ ஏற்படவில்லை. மீதமுள்ள 3 வெடிகுண்டுகள் செல்வராணி வீட்டின் வாசலில் வெடிக்காமல் கிடந்தன. அதில் ஒரு வெடிகுண்டை செல்வராணி வீட்டில் வளா்த்து வந்த நாய் கடித்தது. அப்போது அந்தக் குண்டு வெடித்ததில் தலைசிதறி நாய் உயிரிழந்தது.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பாலமேடு போலீஸாா் செல்வராணி வீட்டின் வாசலில் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றினா். மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடையை முருகனை கைது செய்து, தப்பியோடிய சின்னதுரையைத் தேடி வருகின்றனா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னதுரை பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் வரும் காட்டுப்பன்றிகளை விரட்ட நாட்டுவெடிகுண்டுகளை விற்பனை செய்து வருபவா் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல ஏற்கெனவே வனவிலங்குகளை துப்பாக்கி மூலம் வேட்டையாடியது தொடா்பாக சின்னத்துரை மீது வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com