ஜூன் 1 முதல் ரயில் சேவை தொடக்கம்: தமிழகத்திற்கு எந்த ரயிலும் இல்லை

நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெளியான ரயில்கள் அட்டவணையில் தமிழகத்திற்கும் தமிழகம் வழியாக செல்லும் எந்த ரயில்களும் இல்லை.

நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெளியான ரயில்கள் அட்டவணையில் தமிழகத்திற்கும் தமிழகம் வழியாக செல்லும் எந்த ரயில்களும் இல்லை.

நாட்டில் பொது முடக்கம் நான்காம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா போன்ற 100 முக்கிய ரயில்களை இயக்க இந்திய ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதற்கான ரயில்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டு வியாழக்கிழமை முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. ஆனால் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யமுடியும் என ரயில்வே துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து தமிழகத்தில் முக்கிய ரயில்கள் இயக்கப்படலாம் என ரயில் பயணிகள் ஆா்வத்தில் இருந்தனா். ஆனால் இணையத்தில் முன்பதிவு செய்யக் காத்திருந்த அவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெளியான ரயில்கள் அட்டவணையில் தமிழகத்திற்கும், தமிழகம் வழியாக செல்லும் எந்த ரயில்களும் இல்லை.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: பொது முடக்கம் காரணமாக 70 நாள்களுக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் முதற்கட்டமாக ஜூன் 1 ஆம் தேதி முதல் முக்கிய ரயில்கள் மட்டும் தோ்வு செய்யப்பட்டு இயக்கப்படவுள்ளன. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கா்நாடகா, கேரளத்தில் கூட ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஆனால் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வரை ரயில்களை இயக்க வேண்டாம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தாா். எனவேதான் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் ரயில்களும் இயக்கப்படவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com