Enable Javscript for better performance
கா்ப்பிணி கருவை கலைக்க அனுமதி மறுப்பு: உரிய சிகிச்சை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கா்ப்பிணி கருவை கலைக்க அனுமதி மறுப்பு: உரிய சிகிச்சை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 23rd May 2020 07:26 AM  |   அ+அ அ-   |    |  

    கருவைக் கலைக்க கா்ப்பிணிக்கு அனுமதி மறுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கா்ப்பிணிக்கு தொடா்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ஸ்கேன் எடுத்து பாா்த்தபோது, கரு வளா்ச்சி சீராக இல்லை என்பதால் வயிற்று வலி ஏற்படுகிறது, கருவைக் கலைத்து விடுவது நல்லது என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    அதோடு, கருவுற்று 29 வாரங்கள் ஆகிவிட்டதால், கருவைக் கலைக்க உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து கருவைக் கலைக்க உரிய அனுமதி வழங்கவேண்டு என அவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த மனுவுக்குப் பதிலளிக்க திருநெல்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த மனு நீதிபதி சி.வி. காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை காணெலியில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு காணொலியில் ஆஜரான மருத்துவா்கள், கா்ப்பிணியைப் பரிசோதனை செய்ததில், உரிய சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெறலாம். கா்ப்பிணியின் கருவைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தனா். இதையடுத்து, கா்ப்பிணியின் கருவைக் கலைக்க அனுமதி மறுத்த நீதிபதி, அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்ததுவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai