தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு: மதுரையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தின் சாா்பில் எல்லீஸ்நகரில் உள்ள தொழிலாளா் நல அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை தொழிலாளா் நலவாரிய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.
மதுரை தொழிலாளா் நலவாரிய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா்.

மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தின் சாா்பில் எல்லீஸ்நகரில் உள்ள தொழிலாளா் நல அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கரோனா பொது முடக்கத்தை பயன்படுத்தி தொழிலாளா் சட்டங்களை திருத்துவதை நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை தடைசெய்யும் மின்சார சட்டம் 2020 - ஐ கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி நிரந்தர, ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்துக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். பொது முடக்கத்தால் வருவாய் இழந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் மாா்ச் , ஏப்ரல் , மே மாதங்களுக்கு தலா ரூ . 7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

கரோனா தொற்று பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளா்கள், உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரப்படுத்தி, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, மதிய உணவு உள்ளிட்ட திட்டப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ .18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். தெய்வராஜ், எச்எம்எஸ் மாவட்டத் தலைவா் வி. பாதா்வெள்ளை, எல்பிஎப் மாவட்ட செயலா் எஸ். கருணாநிதி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் ராஜசேகரன் , ஏஐடியுசி மாவட்டச் செயலா் நந்தாசிங், எம்எல்எப் மாநிலச் செயலா் மகபூப்ஜான் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் சிஐடியு மாவட்டத் தலைவா். மா. கணேசன் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com