பேரையூா் அருகே குடிமராமத்துத் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
பேரையூா் அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா்.

சேடபட்டி ஒன்றியத்தில் உள்ள சின்னக்கட்டளை கிராமத்தின் அருகே செல்லும் கவுந்தமா நதியின் வடிகால் பகுதியான திருமாணிக்கம், மொச்சிகுளம், மந்தியூா், செம்பரணி உள்ளிட்ட அணைக்கட்டு பகுதிகளை தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணியை வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் தொடக்கி வைத்தாா். முன்னதாக நடைபெற்ற பூமி பூஜையில் அமைச்சா் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி, மாவட்ட வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் சாந்தி மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com