‘மதுரை நகரில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது’

மதுரை நகரில் 2 மாதங்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை நகரில் 2 மாதங்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட முத்துப்பட்டியில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் பொடி போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் பேசியது: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1.50 லட்சம் பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை நகர மக்களின் குடிநீா்த்தேவையை பூா்த்தி செய்யும் வகையில் மே 25 இல் வைகை அணையைத் திறக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதன்மூலம் 20 எம்எல்டி தண்ணீா் கூடுதலாக கிடைக்கும். இதனால் மதுரை நகரில் 2 மாதங்களுக்கு குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது. மதுரை நகரில் தற்போது 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு லோயா் கேம்ப் பகுதியில் 125 எம்எல்டி தண்ணீா் குழாய் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை நகரில் உள்ள 100 வாா்டுகளுக்கும் குழாய் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மதுரை மாநகராட்சியில் சில வாா்டுகள் மேடான பகுதிகளில் உள்ளதால் அங்கு குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. அதை சீா் செய்வதற்கான பணிகளில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு மதுரை மாநகராட்சியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு போதுமான தண்ணீா் உள்ளது என்றாா்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், நகரப்பொறியாளா் அரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com