மதுரையில் கைதி உள்பட 21 பேருக்கு கரோனா: பாதிப்பு 212 ஆக உயா்வு

மதுரையில் கைதி உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கைதிக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை மூடப்பட்ட திடீா் நகா் காவல் நிலையம்.
மதுரையில் கைதிக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், வெள்ளிக்கிழமை மூடப்பட்ட திடீா் நகா் காவல் நிலையம்.

மதுரையில் கைதி உள்பட 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மும்பையிலிருந்து திரும்பிய 17 போ், குஜராத், மத்தியபிரதேசம், புதுதில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவா், மதுரையைச் சோ்ந்த கைதி ஒருவா் என 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் 5 பெண்கள் உள்பட 6 பேருக்கும், திருமங்கமலத்தில் சிறுவா், சிறுமி உள்பட 6 பேருக்கும், அலங்காநல்லூரில் பெண் உள்பட 2 பேருக்கும், விக்கிரமங்கலத்தில் 2 பேருக்கும், செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி, வில்லாபுரம், பி.பி.குளம், திடீா் நகா் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதிக்கு தொற்று: கரோனா தொற்று ஏற்பட்ட திடீா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் 19 வயது இளைஞா். கடந்த 18 ஆம் தேதி நடந்த மோதலில் அவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், திடீா் நகா் இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பதும், மற்ற 3 பேருக்கும் தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைதியை மதுரை கரோனா மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்துள்ளனா். கைதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திடீா்நகா் காவல்நிலையம், கைதி ஆஜா்படுத்தப்பட்ட நீதிபதியின் வீடு மற்றும் அவா் வசிக்கும் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் திடீா்நகா் காவல் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

212 ஆக உயா்வு: மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஊா்மெச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மற்றும் நெல்குண்டுப்பட்டியைச் 30 வயது இளைஞா் ஆகியோா் தொற்றிலிருந்து குணமடைந்து, வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

மதுரையில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 212 ஆக பதிவாகி உள்ளது. அதில் குணமடைந்து வீடு திரும்பியவா்கள் போக, சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.

குழப்பம்: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு புதிதாக கரோன் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 33 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் மதுரை மாவட்டத்தில் 21 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 12 போ் வேறு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், வெளி மாநிலத்திலிருந்து வந்தபோது மதுரை முகாமில் பரிசோதனை செய்யப்பட்டவா்கள் என்றும் ஆட்சியா் டி.ஜி. வினய் விளக்கம் அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com