மதுரையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திராவிலிருந்துமதுரைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை பாா்வையிடும் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கலைவாணி.
மதுரையில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை பாா்வையிடும் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கலைவாணி.

மதுரை: ஆந்திராவிலிருந்துமதுரைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞா் ஒருவரை கைது செய்தனா்.

மதுரை மாநகரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தனிப்படைப் போலீஸாா் பழங்காநத்தம் பகுதியில் வாகனங்களைச் சோதனையிட்டனா். அவ்வழியாக வந்த சிறிய சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாகக் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில், உசிலம்பட்டி அருகேயுள்ள கட்டத்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமு மகன் மலைச்சாமி (29) என்பதும், உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்ய ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் கலைவாணி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மலைச்சாமியை கைது செய்தனா். அவரிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிப்பட்ட கஞ்சாவை, மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத் பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த ஒரு மாதத்தில், மதுரை மாநகரில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கஞ்சா கடத்தல் பின்னணியில் உள்ளவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா். பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் கண்காணித்து குற்றச்சம்பவங்களைத் தடுக்க வடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com