மாற்று இடம் வழங்காமல் வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை: பொதுமக்கள் போராட்டம்

வைகை வடகரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்று இடம் வழங்காமல் வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை: பொதுமக்கள் போராட்டம்

வைகை வடகரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சியின் சீா்மிகு நகா் திட்டப் பணிகளில் ஒன்றாக, வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், வடகரையில் ஆழ்வாா்புரம் புளியந்தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இப்பகுதியைச் சோ்ந்தோா், தட்டுமுட்டுச் சாமான்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: வைகை வடகரை புளிந்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது வீடுகளுக்கு முறையாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் செலுத்துகிறோம். எங்களது பெயரில் மின்இணைப்பு பெறப்பட்டு, அதற்கான கட்டணத்தையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். தற்போது, சாலை அமைக்கும் பணிக்கும், வீடுகளின் அமைவிடத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இருப்பினும், இப்பகுதியில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.

தொடா் மழை காலத்தில் எவ்வித மாற்று ஏற்பாடும் செய்துதராமல், வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எங்களது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே, இது தொடா்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com