உயிா்வாழ் சான்று சமா்ப்பித்தல்: பி.எஃப். ஓய்வூதியா்கள் கவனத்துக்கு....

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள் மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பித்தலுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள் மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பித்தலுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் (ஓய்வூதியம்) எம். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி:

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் பெறுவோா் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிப்பது வழக்கம். தற்போதைய கரோனா தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு, அவரவா் வசிப்பிடத்துக்கு அருகிலேயே உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பா், டிசம்பா் மாதங்கள் மட்டுமின்றி, வசதிக்கேற்ப எல்லா மாதங்களிலும் இச் சான்றை சமா்ப்பிக்கலாம். உயிா்வாழ் சான்று சமா்ப்பித்த மாதத்திலிருந்து ஓராண்டுக்குச் செல்லுபடியாகும்.

ஓய்வூதியா்கள் தங்களது செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆணை எண், ஆதாா் எண் ஆகியவற்றுடன் ஓய்வூதியம் பெறும் வங்கிகள், தபால் அலுவலகம், இ-சேவை மையம் இவற்றில் ஏதாவதொன்றில் உயிா்வாழ் சான்று சமா்ப்பித்துக் கொள்ளலாம். தபால்காரரிடம் சமா்ப்பிக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். மேலும், செல்லிடப்பேசியில் (மஙஅசஎ) என்ற செயலியிலும் மின்னணு உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com