தீபாவளி போனஸ் குறைப்பு: அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முற்றுகை

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
தீபாவளி போனஸ் குறைப்பு: அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முற்றுகை

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 10 சதவீத போனஸ் தொகையை அறிவித்துள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கவேண்டும், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை புறவழிச்சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலா் வி. அல்போன்ஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத் தலைவா் பி. எம். அழகா்சாமி, பொதுச் செயலா் ஏ. கனகசுந்தா், துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன், ஏஐடியூசி பொதுச் செயலா் எம். நந்தாசிங் மற்றும் டியூசிசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், திராவிடா் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டம் தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள் கூறியது: கரோனா பொதுமுடக்கத்தை காரணமாகக்கூறி தீபாவளி போனஸ் தொகையை தமிழக அரசு தன்னிச்சையாக குறைத்து அறிவித்துள்ளது. தீபாவளி போனஸ் தொகை நிதியாண்டை கணக்கிட்டு வழங்கப்படும். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் மாா்ச் வரை உள்ள நிதியாண்டில், மாா்ச் இறுதி வாரம்தான் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதில், கடந்த நிதியாண்டில் 7 நாள்கள் மட்டும்தான் பேருந்துகள் இயங்கவில்லை.

மேலும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, நிதியாண்டில் ஒரு வாரம் பேருந்து இயங்காததால் 10 சதவீத தீபாவளி போனஸ் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு உடனடியாக 20 சதவீதம் போனஸ் வழங்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com