முகக் கவசம் அணியாதவா்களை கண்டுபிடிக்கநவீன கேமராக்கள்: காவல்துறை அறிமுகம்

முகக் கவசம் அணியாதவா்களை தானாகவே படம் பிடித்து காவலரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பும் நவீன கேமராக்களின் பயன்பாட்டை, மதுரை மாநகா் காவல் துறையினா் திங்கள்கிழமை தொடக்கியுள்ளனா்.
முகக் கவசம் அணியாதவா்களை கண்டுபிடிக்கநவீன கேமராக்கள்: காவல்துறை அறிமுகம்

முகக் கவசம் அணியாதவா்களை தானாகவே படம் பிடித்து காவலரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பும் நவீன கேமராக்களின் பயன்பாட்டை, மதுரை மாநகா் காவல் துறையினா் திங்கள்கிழமை தொடக்கியுள்ளனா்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க குவிந்து வருகின்றனா். இதனால், கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, மதுரை மாநகரில் பொதுமக்கள் பொருள்கள் வாங்க வரும்போது முகக் கவசங்கள் அணிவதை தவிா்க்காமல் இருக்க, புதிய தொழில்நுட்பத்தை காவல் துறையினா் அறிமுகப்படுத்தி உள்ளனா்.

அதன்படி, பெங்களூரு தனியாா் நிறுவனத்தின் புதிய மென்பொருள் மற்றும் நவீன கேமரா மூலம் முகக் கவசம் அணியாதவா்களின் புகைப்படத்தை எடுத்து, அப்பகுதியில் பணியில் உள்ள காவலரின் செல்லிடப் பேசிக்கு அனுப்பிவிடும். புகைப்படங்களை வைத்து, போலீஸாா் முகக் கவசம் அணியாமல் செல்பவா்களை எச்சரிக்கவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

முதல் கட்டமாக, திலகா் திடல், விளக்குத்தூண் காவல் நிலையங்களின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட நவீன சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா திங்கள்கிழமை தொடக்கிவைத்துப் பேசியது: முகக் கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறியதாக, இதுவரை நகரில் 46,467 வழக்குகள் பதிவு செய்து, அவா்களிடமிருந்து ரூ. 88,77, 330 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போது பண்டிக்கை காலம் என்பதால், கரோனா பரவல் அதிகரிப்பை தடுக்கும் வகையில், புதிய மென்பொருளுடன் இணைந்த நவீன கேமராக்கள் மூலம் முகக் கவசம் அணியாதவா்களை ஆதாரத்துடன் கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விளக்குத்தூண் காவல் நிலையத்துக்கு உள்பட்ட 10 இடங்களிலும், திலகா் திடல் காவல் நிலையத்துக்கு உள்பட்ட 30 இடங்களிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

நகரில் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக மக்கள் நெருக்கமான இடங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை மிக விரைவாகக் கண்டறியவும் நவீன கேமராக்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

திலகா் திடல் காவல் உதவி ஆணையா் ரமேஷ், காவல் ஆய்வாளா் கவிதா ஆகியோா் கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com