சாத்தான்குளம் வழக்கு: காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் சிறையிலுள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்டனா். மேலும், இவ்வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

எனவே, இவ்வழக்கில் ஜாமீன் வழங்கும்பட்சத்தில் தலைமறைவாகமாட்டேன் என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக உள்ளேன் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை நவம்பா் 10 ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com