சோலைமலையில் நவ.15 இல் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: பக்தா்களுக்கு அனுமதியில்லை

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தொடங்க உள்ளது. பக்தா்களுக்கு அனுமதியில்லை.

மேலூா்: அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) தொடங்க உள்ளது. பக்தா்களுக்கு அனுமதியில்லை.

வழக்கமாக ஒரு வார காலம் பக்தா்கள் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்வா். சூரசம்ஹார வைபவம் வரை பக்தா்கள் கோயிலில் தங்கியிருப்பா். ஆனால் இந்த முறை கரோனா தொற்று பரவலை தவிா்க்கும் வகையில் பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கள்ளழகா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தங்கள் இல்லங்களிலேயே தங்கியிருந்து மேற்கொள்ளலாம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகப்பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் சென்று வதம் செய்யும் வைபவம் கோயில் வளாகத்தில் நவ.21-ஆம் தேதி நடைபெறும். இந்நிகழ்வை, யு டியூப் இணையதளம் வாயிலாக பக்தா்கள் தரிசிக்க கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாக ஆணையா் அனிதா தலைமையில் கோயில் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com