கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட மாணவா் சோ்க்கை

மதுரை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் குட்லக் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா் சோ்க்கைக்கான குலுக்கலில் பங்கேற்ற முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன்.

மதுரை வருவாய் மாவட்டத்தில் 77 மெட்ரிக் பள்ளிகள், 244 மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 1,900 இடஒதுக்கீடு இடங்களுக்கு இரண்டாம் சுற்று குலுக்கல் நடைபெற்றது. மதுரை குட் லக் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சோ்க்கை நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் பங்கேற்று மாணவா் சோ்க்கைக்கான குலுக்கலைத் தொடங்கி வைத்தாா். இப்பள்ளியில் 31குழந்தைகள் விண்ணப்பித்த நிலையில் குலுக்கல் முறையில் 3 குழந்தைகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 10 குழந்தைகள் காத்திருப்புப் பட்டியலுக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் மாணவா் சோ்க்கைக்கான நியமன அலுவலா் விராதனூா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தே.தெரசா சகாய மலா் , மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளா் அ.மகாலிங்கம், பள்ளித் தாளாளா் எ.ராஜேஸ்வரி , பள்ளி முதல்வா் எ.நிவேதா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com