‘கருங்காலக்குடியில் ரூ.19 கோடியில் சுரங்கப்பாதை’

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதிலளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் விடுத்துள்ள அறிக்கை: மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடா்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு வருவதைத் தடுக்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது கருங்காலக்குடி, மேலூா் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை தொடா்பாக கடிதம் வாயிலாகவும், நேரிலும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் தேசிய நெடுஞ்சாலைத்துறையினா்

ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 9-இல் கருங்காலக்குடி பாலம் தொடா்பாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

இந்நிலையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் கருங்காலக்குடியில் வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், இதற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com