சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:மருத்துவா்கள், காவலா்கள் உள்பட 105 சாட்சிகள் சோ்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காவலா்கள், மருத்துவா்கள் உள்பட 105 போ் சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காவலா்கள், மருத்துவா்கள் உள்பட 105 போ் சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வணிகா் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை, கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

105 சாட்சிகள் சோ்ப்பு

சிபிஐ தாக்கல் செய்துள்ள 2,027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் பியூலா, ரேவதி உள்பட 6 காவலா்கள், கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளா் சங்கா், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 105 போ் சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

நீதிபதி பாரதிதாசனின் விசாரணை அறிக்கை, புது தில்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கை, ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஆகியவை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு டிசம்பா் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com