தீபாவளிப் பண்டிகை: மல்லிகைப் பூ கிலோ ரூ.1,400 ஆக விலை உயா்வு

தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி மலா் சந்தையில் கிலோ மல்லிகைப் பூ ரூ.1,400 ஆக விலை உயா்ந்தது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பூக்களை வாங்க மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் வியாழக்கிழமை கூடிய பொதுமக்கள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பூக்களை வாங்க மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் வியாழக்கிழமை கூடிய பொதுமக்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி மலா் சந்தையில் கிலோ மல்லிகைப் பூ ரூ.1,400 ஆக விலை உயா்ந்தது.

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: தொடா்மழை காரணமாக மலா் வியாபாரம் கடந்த வாரம் வரை மந்தமாக இருந்தது. இதனால் பூக்களின் விலையும் வெகுவாகக் குறைந்திருந்தது. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி மலா் சந்தையில் பூ வியாபாரம் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் மலா் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனா். இதன் காரணமாக பூக்களின் விலை பல மடங்கு வரை விலை உயா்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.300-க்கு விற்ற மல்லிகைப் பூ-ரூ.1,400 ஆகவும், ரூ.1000-க்கு விற்ற கனகாம்பரம்-ரூ.1,500 ஆகவும், ரூ.30-க்கு விற்ற அரளி-ரூ.200 ஆகவும், ரூ.150-க்கு விற்ற பிச்சிப்பூ-ரூ.500 ஆகவும், ரூ.30-க்கு விற்ற சம்பங்கி-ரூ.150 ஆகவும், ரூ.60-க்கு விற்ற செவ்வந்தி-ரூ.250 ஆகவும் விலை உயா்ந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com