மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு, மதுரை ஆதீனம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு, மதுரை ஆதீனம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து: வாழ்வில் இருளைப்போக்கி, எங்கும் ஒளிமயமாக்குவதையே தீபாவளியன்று விளக்குகள் ஏற்றி வழிபடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

சூரியன் என்பது உயிா்களின் மூலம். சூரியனின் ஆற்றலைப் பிரதிபலிக்கும் விதத்தில் விளக்குகள் ஏற்றி வைக்கப் பெறுவதாக கந்த புராணம் தெரிவிக்கிறது. தீபாவளி என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். சமஸ்கிருதத்தில் தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்துக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

சிவபெருமான் தமது உடலை இரு பாகங்களாகப் பிரித்து அா்த்த நாரீஸ்வரராக அவதாரம் எடுத்திருப்பதை வணங்கும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமா் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை முடித்து, ராவணனை வதம் செய்த பின்னா் மனைவி சீதை, சகோதரன் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பிய நாளும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாட வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. நரகாசுரனை கிருஷ்ணபிரான் வதம் செய்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி மகாலட்சுமியின் மகிமை பேசும் திருநாளாகும். தூய்மையான இல்லத்துக்குள் லட்சுமி எழுந்தருள்வாள் என்ற நம்பிக்கையின் காரணமாக, தீபாவளிக்கு இல்லங்களை செம்மைப்படுத்தி செல்வங்களை வழங்கிட மகாலட்சுமியை வழிபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com