மதுரை வடக்கு, திருமங்கலம் உள்ளிட்டவட்டாட்சியா்கள் 8 போ் இடமாற்றம்

மதுரை வடக்கு வட்டம், திருமங்கலம் வட்டம் உள்ளிட்ட 8 வட்டாட்சியா்களை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வியாழக்கிழமை இடமாற்றம் செய்துள்ளனா்.

மதுரை வடக்கு வட்டம், திருமங்கலம் வட்டம் உள்ளிட்ட 8 வட்டாட்சியா்களை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வியாழக்கிழமை இடமாற்றம் செய்துள்ளனா்.

இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள், புதிய பணியிடம், அடைப்புக்குறிக்குள் பழைய பணியிட விவரம்:

எல்.முத்துப்பாண்டியன் (திருமங்கலம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - திருமங்கலம் வட்டாட்சியா், பி.விஜயலெட்சுமி (மேலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்) - உசிலம்பட்டி வட்டாட்சியா், எஸ்.முத்துவிஜயகுமாா் (மதுரை வடக்கு டாஸ்மாக் கிடங்கு மேலாளா்) - மதுரை வடக்கு வட்டாட்சியா், ஏ.தனலெட்சுமி (திருமங்கலம் வட்டாட்சியா்) - திருமங்கலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா், கே.செந்தாமரை (உசிலம்பட்டி வட்டாட்சியா்) - தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி வட்டாட்சியா் மேலூா், ஏ.சுரேஷ் பிரெட்ரிக் கிளமென்ட் (மதுரை வடக்கு வட்டாட்சியா்) - திருமங்கலம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா், எம்.ஆனந்தி (திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்) - மதுரை வடக்கு டாஸ்மாக் கிடங்கு மேலாளா், பி.ஜெயஷா்மிளா (தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனிவட்டாட்சியா்) - மேலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com